நேர்மறையாக சிந்திக்கும் தன்மை அதிக அளவில் குறைந்து விட்டது.
இதன் பின் புலன் ஒரு தனிநபர் வாழ்க்கை முறைமை தொடக்கம். அவரது கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் என்று எதுவாக வேண்டுமாயினும் இருக்கலாம் ஆனால் நேர்மறை எண்ணங்களை வாழ்க்கையின் நடைமுறைக்கு கொண்டு வருதல் அவ்வளவு எளிதல்ல.
காரணம் இன்றைய சம நிலையற்ற இளைஞர்களின் மனநிலை மிக விரைவாக எதிர்மறை எண்ணத்தாக்கங்களினால் பாதிப்படைகிறது.
உதாரணமாக சொல்லப் போனால் அதிகாலையில் துக்கத்திலிருந்து எழும் இளைஞன் தொலைபேசியினையே முதலில் பார்க்கிறான். அதுவும் சமூக வலைத்தளங்களில் பிறர் இட்டு இருக்கும் பதிவுகளை பார்க்கிறான். அப்படி பார்க்கும் போது அவ் இளைஞனுடன் படித்த ஒரு நபர் அவர் வாழ்கையில் அடைந்த சாதனை மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பதிவிட்டிருப்பார்.
அது நன்று ஆனால் இதனை காணும் இவ் இளைஞன் தன்னை அவருடன் இணைத்து தன் இயலாமை மற்றும் ஒரு வித தாழ்வு மனப்பான்மைக்குள் உள்வாங்கப்படுகிறார்.
இப்போது அதிகாலையில் அவரது மனநிலை எதிர்மறை எண்ணங்களால் சூழப் படும் அதன் பின் அவருடைய அன்றாட வாழ் நாள் நடவடிக்கை யாவற்றிலும் அது அதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் .
அவ் இளைஞன் எடுத்து வைக்கும் யாவற்றிலும் இவ் எதிர்மறை எண்ணம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கும் .
ஆகவே தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்களை தோற்றுவிக்க பயிற்சிகள் தேவைப் படுகின்றன.
எனவே விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் வாழும் கலை நம்பிக்கை கிராமத்தில் வசிக்கும் சிறுமிகளுக்கான வாழ்வியல் பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.
தரம் 6 முதல் தரம் 11 வரையான 11 மாணவர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர். நேர்மறையான எண்ணங்கள், பயத்தை எதிர்கொள்ளல் எனும் தொனிப் பொருட்களில் அவர்களுக்கான பயிற்சி நடாத்தப்பட்டது.
உலகளவில், 10-19 வயதுடைய இளம் பருவத்தினரில் சுமார் 14% பேர் மனச்சோர்வு, பதற்றம் மற்றும் நடத்தை சீர்குலைவுகள் போன்ற மனநல நிலைமைகளை அனுபவிக்கின்றனர்.
இந்த எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலும் சிகிச்சை அளிக்கப்படாமலும் இருக்கும். 15-29 வயதுடையவர்களிடையே இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாக தற்கொலை உள்ளது.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு மனநல சவால்களின் கடுமையான தாக்கத்தை இது பிரதிபலிக்கிறது.
எனவே இதுபோன்ற வாழ்க்கைப் பாடங்களை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நாளைய சமூகத்தை வடிவமைப்பதில் எங்களைப் போன்ற நிறுவனங்கள் பங்களிக்க வேண்டியது அவசியம்.