விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பெற்றோர்களுடனான பயிற்சிநெறி தெளிவூட்டல் மற்றும் கலந்துரையாடல்

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பயிற்சிக்காக வரும் மாணவர்களுக்கு பயிற்சிநெறியினை வழங்குவதில் மட்டும் கவனம் கொள்ளாது அவர்களின் சமூக வாழ்வை அவர்கள் மேம்படுத்தகூடிய பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் Office management & IT பாட நெறியினை தொடரும் பயிலுனர்கள் மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் 31.05.2025 சனிக்கிழமை அன்று மு.ப 10 மணிக்கு கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 35 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்க விடயமாகும்.

அந்த வகையில் கல்லூரியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அவர்களினால் 13 வருட கால கல்லூரியின் வளர்ச்சி பற்றியும் கல்லூரியின் செயற்பாடுகள் பற்றியும் பூரணமான விளக்கங்கள் பெற்றோர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதோடு, இன்றைய காலகட்டத்தில் தொழில்கல்வியின் அவசியமும் மற்றும் பயிலுனர்கள் தமது பயிற்சிநெறியின் பின்னர் ஒரு தொழில் அனுபவத்தினை பெறுவதன் அவசியம் பற்றியும் பெற்றோர் மத்தியில் தெளிவூட்டப்பட்டது.

அதனடிப்படையில் பாடநெறி தொடர்பான பூரண விளக்கம் பெற்றோர் மத்தியில் தெளிவூட்டப்பட்டதோடு பெற்றோர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடதக்க விடயமாகும். அத்துடன் பயிலுனர்கள் தமது பாட நெறி தொடர்பான ஆக்கபூர்மான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமன்றி பாடநெறி தொடர்பான ஒப்பந்தமும் பெற்றோர் மத்தியில் கையளிக்கப்பட்டமை எமது கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் பாடநெறிகளின் தரத்தின் நிலைத்தன்மையினை பிரதிபலிக்கின்றது.

அதனைத் தொடர்ந்து எமது கல்லூரியின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளரின் நன்றியுரையுடன் இக்கலந்துரையாடல் முடிவுற்றது.

By Admin

Related Post