சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொழில் வழிகாட்டல் செயலமர்வு

Career Guidance
Career Guidance

எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தமது சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வண்ணம் காரைதீவு பிரதேசத்தில் இராமகிருஸ்ண மிஷனுடன் இணைந்து சமுதாய கல்லூரி முறைமையில் கணினி கற்கை பிரிவு ஒன்றினை காரைதீவு சாரதா இல்ல வளாகத்தில் தோற்றுவித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிற்கான வாழ்வியலும் வழிகாட்டல் சேவைகளை வழங்கிவருகின்றது.

அந்த வகையில் சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு தினத்தை சிறப்பிக்கும் வகையில் இராமகிருஸ்ண மிஷனின் அனுசரணையில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஏற்பாட்டில் நடாத்தப்படுகின்ற மாதம் ஒரு செயலமர்வின் முதலாவது செயலமர்வானது இராமகிருஷ்ணமிஷன் தலைமையில் சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணில் சிறந்த முறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமிஜி நீலமாதவானந்தஜி மகராஜ், எமது கல்லூரியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் மற்றும் எமது கல்லூரியின் சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் ஸ்ரீமத் சுவாமிஜி நீலமாதவானந்தஜி மகராஜ் அவர்களின் ஆன்மீக உரையினை தொடர்ந்து எமது கல்லூரியின் பணிப்பாளர் அவர்களினால் இளைஞர்களிற்கான தொழில்வழிகாட்டலின் தேவை பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விபுலானந்தரின் நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையில் எமது கல்லூரியின் வாழ்வியலும் வழிகாட்டல் பயிற்சியாளர்கள் குழுவால் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வானது சிறப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

20 இளைஞர்கள் கலந்து கொண்ட இச்செயலமர்வில் இளைஞர்கள் தமது இலக்கினை அடையாளப்படுத்துவது பற்றியும் தமது இலக்கினை அடைவதற்கான வழிமுறைகள் ,அதற்காக வளர்த்துக் கொள்ளவேண்டிய திறன்கள், அவர்களது இலக்கினை சரியாக அடையாளங்கண்டு அதற்காக படிப்படியாக முயற்சி செய்வதன் மூலம் இலகுவில் இலக்கினை அடையவது பற்றியும் தெளிவூட்டப்பட்டதோடு மட்டுமன்றி பிரச்சினைகளை தீர்த்தல் எனும் தலைப்பில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதனை இலகுவில் தீர்க்கும் வழிமுறைகள் பற்றிய தெளிவூட்டல்களும் பல்வேறுபட்ட செயற்பாடுகளின் மூலம் இளைஞர்களுக்கு மிகச்சிறப்பான முறையில் தெளிவூட்டப்பட்டது.

சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவில் அவரது நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இச் செயலமர்வு இளைஞர்களுக்கு தொழில் வழிகாட்டலை மட்டுமன்றி அவர்களின் வாழ்வியல் திறன்களையும் அடையாளப் படுத்துவதாக அமைந்திருந்தமை குறிப்பிட்டதக்க விடயமாகும். தொடர்ச்சியான வழிகாட்டல் செயலமர்வுகளிற்கான உங்கள் ஆதரவிற்கு நன்றி.

Career Guidance Workshop in Commemoration of Swami Vipulananda’s Centennial Celebration

To expand its initiatives for social transformation, our Vivekananda College of Technology, in collaboration with the Ramakrishna Mission, has established a computer education division under the community college model at the Saratha Illam premises in Karaitivu. This center currently offers career guidance and life skills services to students and youth in the region.

In this context, and in celebration of Swami Vipulananda’s centennial, the first session of our “One Workshop per Month” initiative, organized by the Vivekananda Institute of Technology with the support of the Ramakrishna Mission, was successfully held in Karaitivu, the birthplace of Swami Vipulananda, under the leadership of the Ramakrishna Mission.

The event was graced by Srimath Swamiji Neelamadhavanandaji Maharaj, the General Manager of the Ramakrishna Mission in Kallady, Batticaloa, Mr. K. Pratheeswaran, the Executive Director of our institution, and several of our college service team members.

Following the spiritual address by Swamiji Neelamadhavanandaji Maharaj, our Director delivered insightful remarks on the importance of career guidance for youth in today’s world.

As part of the centennial celebrations, our institution’s Life Skills and Career Guidance Trainers Team then conducted a dedicated career guidance workshop, which was a notable success.

During this session, which was attended by 20 youth, the participants were guided on how to Identify their personal goals, Understand the steps to achieve those goals, Develop the necessary skills for success, and Progress towards their targets through structured and consistent effort.

In addition, under the theme “Problem Solving”, the workshop addressed challenges commonly faced by youth and offered practical solutions through a variety of activities. The session was highly effective and impactful in delivering these messages.

Conducted in Karaitivu, the birthplace of Swami Vipulananda, this centennial workshop not only provided career guidance but also helped youth identify and enhance their life skills — making it a truly meaningful initiative.

We sincerely thank you for your continued support towards these ongoing guidance programs.

By Admin

Related Post