அஞ்சல் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு – பயிலுனர்களுக்கான செயலமர்வு

Awareness Session
Awareness Session

எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது பயிலுனர்களுக்கு பாடநெறியினை மட்டுமன்றி சமூகத்தின் மீதான பற்றினை ஏற்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றது.

அந்தவகையில் எமது கல்லூரியின் பயிலுனர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் திணைக்களத்தினரால் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு செயலமர்வானது 2025.06.20 வெள்ளிக்கிழமை அன்று எமது விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட பயிலுனர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் ஒருவர் இன்னொருவரோடு தொடர்பினை ஏற்படுத்த பல்வேறுபட்ட முறைகள் இருப்பினும் தற்போதும் பாதுகாப்பான ஒரு தொடர்பாடல் முறையில் அஞ்சல் முறைமையானது முக்கிய இடம் வகிக்கின்றமை குறிப்பிடதக்கவிடயமாகும். அந்தவகையில் இவ்விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் பயிலுனர்களுக்கு முத்திரைகள் பற்றிய விளக்கங்கள், ஒரு தனிநபர் முத்திரை பற்றிய தெளிவூட்டல்கள் மற்றும் தனிநபர் முத்திரைக்கு விண்ணப்பிப்பதற்கு சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்பன பற்றிய தெளிவூட்டல்களோடு அஞ்சல் திணைக்களத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு பொதிகள் சேவை பற்றிய விளக்கங்களோடு அஞ்சல் திணைகளத்தின் ஏனைய செயற்பாடுகள் பற்றியும் மிகத்தெளிவானமுறையில் விளக்கமூட்டப்பட்டமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

Awareness Session on Postal Services – For Technical Trainees

Our Vivekananda College of Technology plays a significant role not only in delivering academic curriculum to trainees but also in instilling a sense of social responsibility.

In line with this, an awareness session on the operations of the Postal Department was conducted by the Batticaloa District Postal Division on Friday, 20th June 2025 for more than 30 trainees of our college.

Although there are numerous ways to connect with one another in today’s evolving technological world, the postal system continues to hold an important place as a secure mode of communication. In this awareness session, trainees were given clear explanations about postage stamps, personalized stamps, the documents required to apply for a personalized stamp, and detailed information on domestic and international parcel services, along with an overview of other services offered by the Postal Department.

This session provided valuable insights and was conducted in a very comprehensive and informative manner.

By Admin

Related Post