இன்றைய நவீன உலகில் AI தொழில்நுட்பமானது தொழில் துறையில் மாத்திரமின்றி அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்துகின்ற நிலையில், இதன் மூலம் சாதகமான மற்றும் பாதகமான விளைவுகளும் ஏற்படுகின்றன.
அந்த வகையில், எதிர்கால சமுதாயமான இன்றைய மாணவர்கள் தொழில்துறையை நோக்கி செல்லும் போது, அவர்களுக்கு தேவையான தொழில்துறை அறிவு மாத்திரமின்றி மேலதிகமாக AI தொழில்நுட்ப அறிவுக்கான தேவை எதிர்காலத்தில் ஏற்படும். இதனை மாணவர்களுடைய பாடசாலை காலத்திலேயே வழங்குவதன் ஊடாக அல்லது அவர்களிடையே அறிமுகப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் AI மீதான ஆர்வத்தை தூண்ட முடியும் என்ற நோக்குடன் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி செயற்பட்டு வருகின்றது.




இந்நிலையில், மாணவர்களுக்கு AI தொடர்பிலான ஆர்வத்தை தூண்டுவதற்கும் அதனை அவர்களிடையே அறிமுகப்படுத்துவதற்கும் ஆசிரியர்கள் AI தொடர்பிலான அறிவை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக 11.03.2026 அன்று “AI for Teachers” என்ற தலைப்பில் AI தொடர்பிலான செயலமர்வு களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பட்டிருப்பு வலய பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர் திரு. R. J. Roshan Joel அவர்கள் கலந்துகொண்டு செயலமர்வை நடாத்தினார்.
இதன்போது AI ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு எவ்வாறு பங்களிப்பு செய்கின்றது, AI இல் உள்ள Tools-களை எவ்வாறு பயன்படுத்துவது, அதன் பயன்கள் என்பன கற்பிக்கப்பட்டன.
இதில் 30 பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டு AI தொடர்பிலான பயிற்சிகளை பெற்றதுடன், அது தொடர்பிலான செயன்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.




